பிரித்தானியாவைச் சேர்ந்த கேட் கன்னிங்ஹாம் என்பவர், 2019 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் மெர்சிசைடில் உள்ள செஃப்டனில் எல்டர் என்ற மரத்தை திருமணம் செய்து கொண்டார்.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இவர், இத்திருமணத்தின் பின்னர் தனது இரண்டாவது பெயரான குடும்பப் பெயரை, எல்டர் என்று மாற்றிக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இயற்கை ஆர்வலரான இவர், இது குறித்து பிரபல ஊடகமொன்றுக்கு செவ்வியளிக்கையில், “சட்டவிரோதமாக மரம் வெட்டுதல், காட்டை
அழித்தல் போன்ற செயல்களுக்கு எதிராகவே, இம் முடிவைத் தான் எடுத்ததாகவும் வாரத்திற்கு ஐந்து முறை, குறித்த மரத்தைப் பார்த்துவிட்டுச் செல்வதாகவும் அம் மரத்துக்கும் தனக்கும் உள்ள உறவு மேலும் வலுவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.