மன்னார் காவல் பிரிவின் சாவற்கட்டு பகுதியில் யானை தந்தத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று(20) மன்னார் காவல் நிலைய அதிகாரிகள் குழு நடத்திய சோதனையைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
மேலதிக விசாரணை
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர், சாவற்கட்டு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மன்னார் காவல்துறையினரால் நடத்தப்பட்டு வருகின்றன.

