பூரண தினத்தில் சட்டவிரோதமாக இரு வீடுகளில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட இருவர் 12 போத்தல் மதுபானங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (20) மட்டக்களப்பு வவுணதீவில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.
விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து இன்று காலை நெடுஞ்சேனை பிரதேசத்தில் வெவ்வேறு இரு வீடுகளை பொலிஸார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன்போது சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட 18 வயதுடைய இளைஞர் ஒருவரை 7 போத்தல் கொண்ட 5,250 மில்லி லீற்றர் மதுபானத்துடனும், 43 வயதுடைய பெண் ஒருவரை 5 போத்தல் கொண்ட 3750 மில்லி லீற்றர் மதுபானத்துடன் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.