மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் இரு இளைஞர்களை கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (22) வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது, மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை போக்குவரத்து பொலிஸார் நிறுத்த முயன்றபோது குறித்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதன் காரணமாக பொலிஸார் இரு இளைஞர்கள் மீது தாக்குதல் தொடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து வந்த பொலிஸ் அதிகாரி இடையில் மறித்து இரண்டு இளைஞர்களில் ஒருவர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.