பேராதனை பல்கலைக்கழக கலை பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
நேற்று (18) பேராதனை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், இது தொடர்பான சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாணவன் குறித்த தகவல்
யக்கல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய அஞ்சன குலதுங்க என்ற இளைஞனே காணாமல் போயுள்ளார்.
காணாமல் போனவர் கடந்த 16ஆம் திகதி எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்று அவர் தங்கியிருந்த தங்கும் விடுதியில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.