யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர் கடந்த (06) இரவு உயிரிழந்துள்ளார்.
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவியே உயிரிழந்தவராவார்.குறித்த மாணவி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்தார்.
இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மாணவி கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.மாணவியின் மரணம்அனைவர் மத்தியிலும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

