புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று (18) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 23 வாக்குகளும் எதிராக 06 வாக்குகளும் பதிவாகின.
பின்னர் குழு அமர்வின் போது சட்டமூலம் பரிசீலிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதுடன், அதன்படி புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.