புத்தளம் – பாலாவி பகுதியில் உள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (25-12-2022) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
குறித்த பெண் சமையல் செய்துக்கொண்டிருந்த போது வெளிச்சம் போதாமையினால் மின்குமிழை பொருத்துவதற்கு முற்பட்ட வேளையிலேயே மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் தில்லையடி பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.