நெட்ப்ளிக்ஸில் (Netflix) வெளியாகியுள்ள ஸ்குவிட் கேம் (squit game) என்ற வெப் தொடரை குழந்தைகளை பார்க்க அனுமதிக்க வேண்டாம் என பிரித்தானியாவை சேர்ந்த பள்ளிகள் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் தொடங்கிய காலப்பகுதியில் இருந்து உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தி இருந்தது. இதனால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை முழுநேரம் போன்களையே பயன்படுத்தினர்.
மேலும் கொரோனா தொற்றால் பரவலால் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களில் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்களுக்கு இணைய வழி மூலம் வகுப்புகள் எடுக்கப்படுகிறது. இதனாலே குழந்தைகள் எப்போதும் போனும் கணினியுமாக சுற்றி வருகிறார்கள்.
இதேவேளை குழந்தைகள் ஆன்லைன் வகுப்பை போனில் கவனிப்பதுபோல பெற்றோர் முன்னிலையில் நடித்து விட்டு கேம்களை விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் நெட்ப்ளிக்ஸில் (Netflix) வெளியாகி உலகம் முழுவதும் பிரபலமடைந்த கொரியன் வெப் சிரிஸ் ஸ்குவிட் கேம்.(squit game) கொரியாவின் பழமையான சில விளையாட்டுகளை வைத்து ஆட்களை கொல்வது போல உருவான கதைகளம் என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது.
மேலும் இந்த இணைய தொடரில் வரும் காட்சிகளை சிறுவர்கள் பார்த்து விட்டு அதில் வருவதுபோல ரீ க்ரியேட் செய்து டிக்டாக் உள்ளிட்டவற்றில் பகிர்ந்து வருவதால் குழந்தைகள் நல ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் பிரித்தானியாவில் பள்ளிகள் இந்த இணைய தொடரை குழந்தைகள் பார்க்க அனுமதிக்க வேண்டாம் என பெற்றோர்களை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.