நாட்டில் பால் மாவிற்கு தட்டுப்பாடு இருக்காது என இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொவிட் நிலமை காரணமாக பொருட்கள் இறக்குமதியில் சிக்கல் நிலவுவதாகவும் அந்த நிலமையிலேயே பால் மாவும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேவையான அளவு பால்மா கைவசம் உள்ளதாகவும் அதனால் நுகர்வோர் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.