கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தும் ரவைகளை உடமையில் வைத்திருந்த ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை, அம்பன் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே நேற்று (26) மாலை 6 மணி அளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
“பொலிஸ் அவசர உதவிப் பிரிவுக்கு தொலைபேசி ஊடாக வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் வீடு ஒன்றில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட சோதனையில் கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 6 ரவைகள் கைப்ற்றப்பட்டன.
அவற்றை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அங்கு வசிப்பவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.