பணம் கேட்டுக் கொடுக்காததால் கோபமடைந்த மகன் தாயின் கழுத்தை நொித்துக் கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் அனுராதபுரம் திரப்பனய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், முச்சக்கர வண்டிக்க தீ வைத்துக் கொழுத்திய சம்பவம் தொடர்பில் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். திரப்பனய கோவில் வீதியில் வசிக்கும் 42 வயதுடைய தொழில்சார் சாரதி ஒருவரே இவ்வாறு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திரப்பனய பாடசாலை சந்தி பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய சந்தேக நபரின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தனது தாயிடம் பணம் கேட்டு, வங்கிக்கு சென்று பணத்தை கொண்டு வருமாறு வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்த நிலையில் தாயார் வங்கிக்கு செல்ல காலதாமதம் செய்து பக்கத்து வீட்டில் இருந்துள்ளார்.
இதனால் , ஆத்திரமடைந்த மகன் தாய்க்கு சொந்தமான முச்சக்கரவண்டிக்கு தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.