உலகக்கிண்ண ரி20 தொடரின் இன்று இடம்பெறவுள்ள குழு 01 போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்றுள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
சூப்பர் 12 சுற்றின் கீழ், இலங்கை இதுவரை இரண்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளது, இதில் இலங்கை அயர்லாந்தை தோற்கடித்து அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
நியூசிலாந்து தனது முதல் சூப்பர் 12 போட்டியில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்தது மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதி பெற இன்றைய போட்டியின் வெற்றி முக்கியமானதாகும்.
இன்றைய போட்டிக்கு பினுர பெர்னாண்டோவிற்கு பதிலாக அசித்த பெர்னாண்டோ அல்லது கசுன் ராஜித இலங்கை அணிக்கு அழைக்கப்படவுள்ளனர்.
குழு ஒன்றின் புள்ளிகள் பட்டியலில் நியூசிலாந்து அணி தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது, அதே நேரத்தில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது.