ஆறு மாதங்களின் பின்னர் , ஒரு மாதத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000ஐக் கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய இம்மாதம் முதலாம் திகதி முதல் 27ஆம் திகதி வரை 51 ஆயிரத்து 865 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.
50,000 இலக்கைத் தாண்டியது
அதேவேளை கடந்த வருடம் ஏப்ரலில் 62 ஆயிரத்து 980 சுற்றுலாப் பயணிகள்நாட்டிற்கு வருகைத் தந்ததன் பின்னர், இலங்கை 50,000 இலக்கைத் தாண்டியது இதுவே முதல் தடவையாகும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சுற்றுலாத்துறையில் மீள் எழுச்சி காணப்படுவதாக அந்தச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.