தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசலுக்குச் சொந்தமான வாகனம் இன்று (14) காலை வென்னப்புவவில் விபத்துக்குள்ளானதில், உந்துருளி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் அறிக்கையின்படி, கொஸ்வத்தவில் உள்ள ஹல்தடுவான பகுதியில், வாகனம் நாடாளுமன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், குறித்த வாகனம், வீதியை விட்டு விலகி எதிர் திசையில் இருந்து வந்த உந்துருளியின் மீது மோதியுள்ளது.
இந்தநிலையில், விபத்து நடந்த நேரத்தில் வாகனத்தை ஓட்டி வந்த நாடாளுமன்ற உறுப்பினர் பைசலின் சகோதரர், கொஸ்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.