வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போது நாடாளுமன்றக் கூட்டங்களுக்காக கிட்டத்தட்ட 20 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உணவு மற்றும் பானங்கள், எரிபொருள், மின்சாரம், நீர், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்குவதற்காக இந்த பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது
வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நவம்பர் 15ஆம் திகதி ஆரம்பமாகி 22ஆம் திகதி வரை ஏழு நாட்கள் நடைபெற்றது.
பட்ஜெட் குழு விவாதம் நவம்பர் 23ம் திகதி ஆரம்பமாகி கடந்த 8ம் திகதி வரை 13 நாட்கள் விவாதம் நடந்தமை குறிப்பிடத்தக்கது.