நேற்றிரவு மீகொட விபத்தில் காயமடைந்த மற்றொரு சிறு குழந்தை உட்பட 7 பேர் ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு வாடகைக் கார், மீகோட சந்திப்பில் உள்ள ஒரு தானசாலையில் வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதன்போது தானசாலை வரிசையில் நின்றிருந்த 15, 32, மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35, 38 வயதுடைய மூன்று ஆண்களும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியான பிலியந்தலாவைச் சேர்ந்த 42 வயதான சந்தேக நபர், விபத்து நடந்த நேரத்தில் மது போதையில் இருந்ததாகக் கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
மீகோட பகுதியில் வெசாக் தானசாலையில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது கார் ஒன்று மோதியதில், மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றிரவு நடந்த இந்த விபத்தில் காயமடைந்த மேலும் ஆறு பேர் சிகிச்சைக்காக ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தப்பியோடிய சாரதி
ஹோமகம – மீகோட பகுதியில் உள்ள ஒரு சாலையில், கோவிலில் வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது வாடகைக் கார் ஒன்று மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
இதன்போது காயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக ஹோமகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், விபத்தினை ஏற்படுத்திய வாடகைக் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

