நத்தார் பண்டிகையுடன் கூடிய மூன்று நாள் விடுமுறையில் ,பெருமளவிலான யாத்திரிகள் சிவனொளிபாதமலைக்கு வருகைத் தந்ததாக கூறப்படுகின்றது.
இதன் மூலம் ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபை டிப்போ 10 மில்லியன் ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நத்தார் விடுமுறை
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஹட்டன் இ.போ.ச பஸ் டிப்போ அதிகாரி கே. கீர்த்திரத்ன,
நத்தார் விடுமுறையின் போது, பெருமளவான யாத்திரிகர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ஹட்டனுக்கு வருகைத் தந்திருந்தனர்.
இந்நிலையில், இவர்களுக்கான குறுந்தூர மற்றும் நெடுந்தூர சேவையில் ஹட்டன் டிப்போவின் இ.போ.ச பஸ்கள் சேவையில் ஈடுபட்டமையால் வார இறுதியில் 127 இலட்ச ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்றார்.
இவ்வாறு அதிக வருமானத்தைப் பெறுவதற்காக சாரதிகள், நடத்துனர்கள் உள்ளிட்ட டிப்போவின் முழு பணிக்குழுவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.