இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24) மேலும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது
கடந்த சனிக்கிழமை (22) 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.384,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.2000 அதிகரித்து ரூ.386,000 ஆக உயர்ந்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 386,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 355,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, நாட்டில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பைப் பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

