தேவையான அனுமதியைப் பெறாமல் நாட்டைவிட்டு வெளியேறும் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
வெளியேறுவதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை
மருத்துவ நிபுணர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை தடுக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் அரச ஊழியர்களுக்கு ஐந்து வருட விடுமுறை காலம் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் மருத்துவ நிபுணர்களுக்கும் பொருந்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடுவோர் தேவையான அனுமதியைப் பெற்று நாட்டைவிட்டு வெளியேற முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனினும் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் நாட்டைவிட்டு வெளியேறுபவர்கள் சேவையிலிருந்து வெளியேறியவர்களாகக் கருதப்பட்டு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்றும் சுகாதார அமைச்சர் கூறினார்.