இலங்கையின் தென் பகுதி கடற்பரப்பில் விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அதிக அளவு போதைப் பொருட்களை கடத்தி வந்த வெளிநாட்டு மீன்பிடி படகு ஒன்றுடன் 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இலங்கை கடற்படையினர் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டு மீன்பிடி படகு மற்றும் 9 சந்தேக நபர்களும் தற்போது இலங்கை கடற்படை கப்பலான சிதுரலாவின் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.