வவுனியா நெடுங்கேணி கோரைமோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villeneuve-Saint-Georges, Gien ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராஜா வினாசித்தம்பி அவர்கள் 18-08-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, நாகம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வனும், இரத்தினசிங்கம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சவிதா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனிஷா, ஜெனினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கோகிலசிகாமணி, பூபாலசிங்கம்(இலங்கை), லீலாவதி(இலங்கை), அரசரட்ணம்(இலங்கை), யுகராஜா(ஜேர்மனி), உதயகுமார்(இலங்கை), சௌந்தரராஜன்(இலங்கை), புஷ்பராஜா(பிரித்தானியா), காலஞ்சென்ற நேசராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கனகரத்தினம், சத்தியேஸ்வரி, விவேகானந்தராசா, விமலாதேவி, செல்வராணி, கிருஷ்ணவேணி, சுகிர்தராணி, காஞ்சனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜேந்திரன்- கோபிகா, கவாஸ்கர்- சுஜந்தா, கதிசன் சிந்துஜா, பிரதாபன்- விலோஜிகா ஆகியோரின் அன்பு மச்சானும்,காலஞ்சென்ற இரத்தினசிகாமணி, தேவிகா, ரேணுகா, வினோஜன், அனோஜன், சந்தரிக்கா, பிரதாபன், அரிகரகஜன், ரவிகரன், சஜீவன், காவியன், கவினன், கம்பன், கபிலன், பவின்கபாஸ்கர், அக்ஷாத், அக்ஷயன், அஜீஷ் ஆகியோரின் அன்பு மாமாவும்,
விஜிதா, துர்சிகன், டிலக்சனா, லோகீர்த்தனன், ஜதுனா, கஜானிகா, விதுர்சன், தாமிகா, ஜெனனிகா, ஜெசிதா, சஜிதா, டனோசா, சினேகன், அபிநயா, ஜீவதாஸ், குணபாலன், சிவக்குமார், கோபினி, சாகரன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
லிசானி, அர்வின், தாமிக்கா, தன்வில், நிதுர்ஜன், பிருத்விகன், சப்தவி ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.