மதுரங்குளி புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பள்ளிவாசல்பாடு கிராமத்தில் உள்ள பலகை வீடொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தினால் வீட்டிலுள்ள அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
வீட்டில் தாயும், தந்தையும் வெளியே சென்ற நிலையில் வீட்டில் இருந்த மகள் தேநீர் தயாரிப்பதற்காக தண்ணீர் சுட வைத்த போதே குறித்த வீடு தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அந்த வீட்டில் இருந்த ஆடைகள், உணவுப் பொருட்கள், இலத்திரனியல் பொருட்கள், தளபாடங்கள் என சகல பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதாக கூறப்படுகிறது.
உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை
எனினும், இந்த தீ விபத்துச் சம்பவத்தில் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், வீடு முழுமையாக எரிந்து போயுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.