எரிபொருளுக்காக காத்திருக்கும் பெண்கள் எதிர்நோக்கும் இன்னல்களை கருத்தில் கொண்டு தற்போது திருகோணமலை நகரில் உள்ள 4 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெண்களுக்கான தனி வரிசையினை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகம் முழு ஒத்துழைப்பையும் வழங்குகின்றது.
அந்தவகையில் இராஜகோபால் நிலையத்திற்கு விகாரை வீதியிலும், லிங்கநகர் IOC நிலையத்திற்கு, லிங்கநகருக்குச் செல்லும் வீதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் 2 எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பொருத்தமான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கற்பிணித் தாய்மார்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது.
கற்பிணித் தாய்மார்கள் கடமைகளில் ஈடுபட்டிருக்கும் பொலிஸாரை அணுகியோ அல்லது முகாமையாளரை அணுகியோ தங்களுக்கான முன்னுரிமையினை பெற்றுக் கொள்ள முடியும் என எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது