திரிபோஷாவில் விஷத்தன்மை உள்ளதாக கூறப்பிட்டமை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட 2 நிறுவனங்களின் அறிக்கைகள் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப் பெறவுள்ளதாக திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கைகளே கிடைக்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கைகள் கிடைத்ததன் பின்னர் திரிபோஷாவின் தரம் குறித்து அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
இதனிடையே உரிய குறியீட்டின் படி உற்பத்தி செய்யப்படும் திரிபோஷா சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் என இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.