கொழும்பில் கடத்தப்பட்டு உயிரிழந்த பிரபல தமிழ் தொழிலதிபர் தினேஸ் சாப்டரின் கொலை தொடர்பில் கையடக்க தொலைபேசிகளை ஆராயும் நடவடிக்கைகள் தொடர்கின்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கையடக்க தொலைபேசிகள் ஆராய்வு
கையடக்க தொலைபேசிகளை ஆராயும் நடவடிக்கைகள் அதிக நேரம்பிடிக்கின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தினேஸ் சாப்டரின் காரை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியுள்ள விசாரணையாளர்கள் குறிப்பிட்ட பகுதியில் உள்ள கையடக்க தொலைபேசி நிலையங்களில் இருந்து தரவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.
டிசம்பர் 15ம் திகதி குறிப்பிட்ட பகுதியில் செயற்பட்ட பயன்படுத்தப்பட்ட அனைத்து கையடக்க தொலைபேசிகளையும் ஆராயவேண்டியுள்ளது என விசாரணையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக கையடக்க தொலைபேசிகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்த அவர் இதன் மூலம் சந்தேகநபர்கள் குறித்த பட்டியலை தயாரிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கையடக்க தொலைபேசி தரவுகளை ஆராயும் நடவடிக்கை பல வாரங்கள் பிடிக்கலாம்,என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
லசந்த விக்கிரமதுங்க படுகொலை
அதேவேளை 2009ம் ஆண்டில் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையுடன் இரகசிய இராணுவ புலனாய்வு குழுவொன்றிற்கு தொடர்புள்ளமை அமெரிக்காவின் விசாரணையாளர்கள் குழுவொன்றுடன் இணைந்து கையடக்க தொலைபேசி தரவுகளை ஆராய்ந்தவேளை தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.