மாதம்பை – வெல்லராவ பிரதேசத்தில் கூரிய ஆயுதம் மற்றும் பொல்லினால் தாக்கப்பட்டு நபரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சில தரப்பினரால் மற்றுமொருவர் தாக்கப்படுவதை தடுக்க முற்பட்டபோதே குறித்த நபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து , தாக்குதலுக்கு இலக்கானவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் மஹகம தெற்கு முகுனுவடவன பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான ஒருவரென தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்ய மாதம்பை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.