திருகோணமலையில் தயிர் சாப்பிட்ட தாயொருவரும் 5 பிள்ளைகளும் திடீர் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது. பாதிக்கப்பட்ட 6, 7, மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் வயிற்று வலி, வாந்திபேதி காரணமாக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை தாய் மற்றும் இரு சிறார்கள் ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
மாடு மேய்ச்சலில் ஈடுபட்டு வரும் குறித்த குடும்பத்தினர் பாலை தயிராக்கி உட்கொண்டதையடுத்து வயிற்றுவலி, மற்றும் வாந்திபேதி ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது. இதனையடுத்து குறித்த அறுவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக கூறப்படுகின்றது.
அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்களில் பரும்பாலானோர் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.