இலங்கையின் அரசியலமைப்பில் அரச மொழியாக அங்கீகரிக்கப்படடுள்ள தமிழ் மொழி தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்ற பல சம்பவங்களில் மேலுமொன்று பதிவாகியுள்ளது.
அதன்படி குறிப்பாக பொது இடங்களில் காட்சிப்படுத்தப்படுகின்ற பெயர் பலகைகளில் தமிழ் மொழியில் பெயர்களை எழுதும் போது அதிகளவில் தவறாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அவ்வாறு புகையிரம் ஒன்றில் தமிழ் மொழி தவறாக எழுதப்பட்டுள்ளமை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நானு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி காலை 6 மணிக்கும் பயணிக்கின்ற பயணிகள் புகையிரதத்தில் ‘ மூன்றாம் வகுப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனம்’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘மூன்றாம் கடுப்பு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனம்’ என்று எழுதப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.