வவுனியா – கள்ளிக்குளம் பகுதியில் கிணற்றில் வீழ்ந்து சிறுவனொருவர் உயிரிழந்தார்.
குறித்த சிறுவன் நேற்றையதினம், கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு முற்பட்ட நிலையில் தவறி கிணற்றில் வீழ்ந்துள்ளார்.
அவர் குறித்த பகுதி மக்களால் மீட்கப்பட்ட போது உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 8 வயதுடைய சிறுவனே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்