ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை பொறுப்பேற்கும் அளவுக்கு முட்டாள் ஒருவரை சந்தித்த பிறகு ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகின் இரண்டாவது பெரிய பணக்காரரான மஸ்க், “ட்விட்டரின் CEO பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று 57.5% ட்விட்டர் பயனர்களின் கருத்துக்கு தான் உடன்படுவதாகக் தெரிவித்துள்ளார்.
அவருக்கு பதிலாக சரியான நபரைக் கண்டுபிடித்த பிறகு, ட்விட்டரின் மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களைத் தொடர்ந்து வழிநடத்துவேன் என்று மஸ்க் கூறியுள்ளார்.
மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு செய்யப்பட்ட மாற்றங்களுக்கு பல தரப்பினரும் அதிருப்தியை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.