டெல்லியில் 35 துண்டுகளாக வெட்டி பெண்ணை பிரிஜ்ஜுக்குள் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தெரியவருகையில்,
டெல்லியில் நஜாப் கார் நகரில் மித்ராவன் கிராம புறத்தின் சாலையோர பகுதியில் உணவு விடுதியில் உள்ள ப்ரிஜ்ஜில் 25 மதிப்புடைய பெண்ணின் சடலம் உள்ளதாக பொலிசாருக்கு தகவல் சென்றிருக்கிறது.
விரைந்து வந்த பொலிசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு அந்த இளம் பெண் யார்? எப்படி கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு
விசாரணையில் இந்த இளம் பெண் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நிக்கி யாதவ் என்பதும் அவர் ஷாஹில் கெலால் என்ற இளைஞருடன் லீவ் இன் முறையில் வாழ்ந்து வந்தமையும் தெரிய வந்தது.
கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நொய்டா நகரில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள் என்பதும், இந்த திருமணத்தை தெரிந்து கொண்ட சாகிலின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது .
இதை அடுத்து சந்தேகத்தின் பேரில் சாகில் கைது செய்யப்பட்டு இடம்பெற்ற விசாரணையில் தான் நிக்கி யாதவ் உடன் லின் இன் உறவில் இருந்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதோடு லின் இன் முறையில் இருந்து கொண்டே குடும்பத்தினர் பார்த்த வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறார் .
ஐவர் கைது
இதை அறிந்த நிக்கி வேறொரு பெண்ணை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை இறுக்கி நிக்கி யாதவை கொலை செய்து உடலை காரில் கொண்டு சென்று உணவு விடுதி பிரிட்ஜில் மறைத்து வைத்திருந்திருக்கிறார்.
பொலிஸ் விசாரணையில் நிக்கி- சாகில் இருவருக்கும் இடையே நடந்த திருமண சான்றிதழ்களை பொலிசார் கைப்பற்றி உள்ளார்கள் . உடலை வைப்பதற்காக நண்பர், உறவினர்கள் உதவி இருக்கிறார்கள்.
சாகிலுக்கு உதவியதாக அவரது தந்தை வீரேந்திர சிங், ஆசிஸ், நவீன் ஆகிய உறவினர்களும் நண்பர்கள் அமர் ,லோகேஷ் என்று ஐந்து பேரை பொலிசார் கைது செய்துள்ளனர் .
அதேவேளை இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது