ஜனாதிபதியின் பதவி விலகல் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண அறிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியொருவர் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னரே பதவியை இராஜினாமா செய்தது இதுவே முதன் முறை எனவும் அதற்கு நீண்டகால பொருளாதார நெருக்கடி கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்கள் அமைந்ததாக தெரிவித்துள்ளது.
30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவற்காக பாதுகாப்பு செயலாளராக பாரிய சேவையாற்றிய ஜனாதிபதியின் இன்றைய இந்த தீர்மானமானது அவர் நாட்டின் மீது கொண்டுள்ள அன்பாயும் நாடு பற்றையும் வெளிக்காட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர் காலத்தில் உங்களது மதிப்பையும் பெறுமதியையும் இந்த சமூகம் அறியும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லையென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.