ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 பாநாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில் கோட்டாபய ஜனாதிபதி பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை தற்போதைய சூழ்நிலை குறித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள கட்சி தலைவர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
மேலும் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பிரதமர் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு விசேட கட்சி தலைவர் கூட்டத்திற்கு அழைப்பு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பதிவிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். நாட்டு பெரும் அல்லோலகல்லோலப்படும் நிலையில் நாட்டின் நிலைமை தொடர்பாக கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக அவசர கட்சித் தலைவர் கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார்.