வெல்லவாய – வெலியார பிரதேசத்திற்கு சுற்றுலாப் பிரயாணிகள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பிரதேச சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசத்திற்கு கடந்த சில தினங்களில் சென்ற சிலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதன் காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றுலா செயற்றிட்டத்தின் கீழ் பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட பின்னர் குறித்த பிரதேசம் மீண்டும் சுற்றுலாப் பிரயாணிகளுக்குத் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.