இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி அடைந்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாத்திரம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
இதன்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 102,545 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.
இதன்போது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 82,327 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்ததுடன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துள்ளனர்.