ஹிந்தியில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர் வைஷாலி. இவர் நடித்து சீரியல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தமிழில் டப் செய்யப்பட்டு கூட இவருடைய சீரியல்கள் ஒளிபரப்பாகியுள்ளன.
தன்னுடைய க்யூட்டான நடிப்பினால் ரசிகர்களின் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகை வைஷாலி தீடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நடிகை வைஷாலி, ராகுல் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இந்த காதல் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. வைஷாலி மற்றும் ராகுல் காதல் முறிந்துவிட்டது. இதன்பின் ராகுல் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
சம்பவம்
அதே போல் வைஷாலியும் வேறொரு நபரை திருமணம் செய்துகொள்ள தயாராகியுள்ளார். நிச்சயம் வரை சென்ற திருமணம் திடீரென நின்றுபோனது. வைஷாலியை அவருடைய முன்னாள் காதலர் ராகுலும் அவருடைய மனைவியும் கொடுமை செய்து வந்துள்ளனர்.
காதலிக்கும்போது எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்களையும், வைஷாலியின் பிரைவேட் வீடியோக்களையும் வைத்து வைஷாலியை பிளாக் மெயில் செய்துள்ளனர். இதனால் நடிகை வைஷாலி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
அதே போல் வைஷாலி எழுந்திருந்த கடிதத்தில் ராகுலையும், அவருடைய மனைவியையும் தண்டிக்கவில்லை என்றால் தன்னுடைய ஆத்மா ஷாந்தி அடையாது என்று எழுதியுள்ளாராம்.