சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கரிம/ சேதன உரத்தை ஏற்றி வந்துள்ள கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் விடுத்துள்ள சம்மன் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறப்பட உள்ளது.
குறித்த நிறுவனம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கோரி தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவையின் மேலதிக பணிப்பாளருக்கு சமீபத்தில் சம்மன் அனுப்பியது.
குறித்த சம்மன் கடந்த 9ஆம் திகதி தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவையின் மேலதிக பணிப்பாளருக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சீன நிறுவனமொன்று இலங்கைக்கு அனுப்பிய கரிம உரத்தொகையில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் காணப்படுவதால் அதனை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் மறுத்திருந்தது.
தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவையினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், கரிம உரங்களுடன் கூடிய ´ஹிப்போ ஸ்பிரிட்´ என்ற கப்பல் தொடர்ந்தும் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.