இன்று காலை 7.10 மணிக்கு பாடசாலைக்கு சென்றிருந்தேன். எனினும் அவர்கள் என்னை கையெழுத்து வைப்பதற்கு அனுமதிக்கவில்லை. என்னை காத்திருக்கச் சொன்னார்கள். நான் ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக காத்திருந்தேன். எனினும் என்னை அவர்கள் கையெழுத்திடுவதற்கு அனுமதிக்கவில்லை என்று திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் தெரிவித்தார்.
இன்று காலை குறித்த பாடசாலையில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், அதிபர் ஆசிரியர் இடையே முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், அப்பாடசாலை அதிபரும், ஆசிரியரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அப்பாடசாலையில் இன்று காலை என்ன நிகழ்ந்தது என்பது குறித்து ஆசிரியரிடம் எமது செய்திப் பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது,
இதேவேளை அதிபர் மற்று பாடசாலை தரப்புடன் தொடர்புகொள்ள முயற்சித்த போதும் எந்தவிதமான தகவல்களும் பெறமுடியவில்லை.