கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றின் பிரதான வழக்கு அறையில் இருந்த சுமார் 68 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் காணாமல்போன சம்பவம் தொடர்பில் ஊழியர் கைதாகியுளார்.
வழக்கு அறையின் பாதுகாவலராக இருந்த நீதிமன்ற ஊழியர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
குறித்த வழக்குப் பொருட்கள் காணாமல் போனபோது இந்த சந்தேக நபர் பிரதான நீதிவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் அறையின் பாதுகாவலராக கடமையாற்றியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைதான சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.