இலங்கையில் இந்து பௌத்த சமயங்கள் இணைந்தே இருந்ததை நிரூபிக்க மற்றோரு சான்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.
கௌதம புத்த பகவானின் புனித தந்தத்திற்கு இந்து மத ஆராதனையுடன் ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வு இறுதி ரந்தோலி பெரஹரவை முன்னிட்டு இடம்பெற்றது.
இதன்போது ஆலயத்திலிருந்து, ஸ்ரீ தலதா மாளிகைக்கு ஸ்ரீ சோமசுந்தரேசுவரப் பெருமானின் ஆசிர்வாதத்துடன் பொருட்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆராதனை இடம்பெற்றது.
இந்நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, நாட்டில் மதங்கள் மக்கள் ஒன்றிணைந்த நல் நிகழ்வாக அமைந்துள்ளது.