நுவரெலியா – அக்கரப்பத்தனையில் ஒரே நாளில் மூன்று கோவில்களில் கொள்ளை சம்பவம் இடப்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை சின்னத்தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தினுள் நுழைந்த திருடர்கள் சாமி நகை, தங்க நகைகள் மற்றும் உண்டியலில் புகுந்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதனிடையே அருகில் உள்ள பச்சபங்களா தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றார். இதைத் தொடர்ந்து, உருளேகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தோட்டத்தின் பூட்டை உடைத்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளார்.
அக்கரப்பத்தனை நகரை ஒட்டியுள்ள தோட்டங்களில் ஒரே நாளில் மூன்று கோவில்கள் திருடப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து அக்கரப்பத்தனை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் கைரேகை பிரிவினர் ஆலய கட்டிடங்களுக்கு சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் அக்கரப்பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.