நாட்டில் அரசாங்கத்து எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள கோட்டா வீட்டுக்குப் போ எனும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன், புதிதாக திருணமான தம்பதியினரும் இணைந்து கொண்டனர்.
நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து நாடளாவிய ரீதியில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
நாட்டை இந்த நிலைக்கு தள்ளிய அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் பதவி விலகுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கபப்ட்டுள்ளது.
அந்தவகையில் காலி முகத்திடலில் இன்று நான்காவது நாளாகவும் கோட்டா கோ கோம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமண கோலத்தில் புது மணத்தம்பதிகள் , இலங்கையின் தேசியக் கொடியை ஏந்தியவாறு போராட்டத்தில் களமிறங்கிய புகைப்படம் வைரலாகி வருகிறது.