கொழும்பின் புறநகர் பகுதியான ராகம பிரதேசத்தில் திடீரென அதிக மின்னழுத்தத்தில் மின்சாரம் வழங்கப்பட்டதால் வீடுகளில் உள்ள மின்சாதனங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராகம பேரலந்த பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
மின்சார தடைப்பட்டு மீண்டும் விநியோகம் சீரமைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே தமது மின் உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதிக்கு பொறுப்பான மின்வாரிய பொறியியாளருக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்திய போதிலும் அவர் பதிலளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் வீடுகளில் உள்ள மின்சாதனங்கள் சேதம் அடைந்ததால், நஷ்டஈடு வழங்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மின்சாரம் தடை செய்து மீண்டும் விநியோகம் சீரமடைக்கப்பட்டவுடன் பாரிய சத்தத்துடன் பல வீடுகளில் உள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மின்சார துறையினரின் தவறால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு நியாயம் வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
பிரதேசத்திற்கு பொறுப்பான மின்சார சபை அலுவலகத்திற்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் என மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் பின்னர் விசாரணை நடத்தி மேலதிக நடவடிக்கைகளை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.