கொழும்பில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்களை கொடூரமாக தாக்கும் பெண்கள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
கல்கிஸ்ஸ – இரத்மலானை பகுதிகளில் தகாத உறவில் ஈடுபடும் பெண்கள், இளைஞர் தனியான இடத்திற்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கி அவர்களின் உடமைகளை களவாடுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தகாத உறவுக்காக பெண்களை நாடும் இளைஞர்களே இந்த ஆபத்தான நிலைக்கு முகங்கொடுப்பதாக தெரிய வந்துள்ளது.
கல்கிஸ்ஸ பகுதியில் அமைந்துள்ள பழடைந்த வீடொன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெறுகிறது.
குறித்த பெண்களுக்கு துணையாக சில ஆண்களும் செயற்படுவதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து கல்கிஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.