தலங்கம வடக்கு பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாக ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக மாலபே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நபர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கொஸ்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு வடக்கு தலங்கம, கெகிரிஹேன பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய நபரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அந்த உயிரிழந்தவரின் சடலமானது பிரேதபரிசோதனைகளுக்காக கொஸ்வத்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளையும் மேலதிக விசாரணைகளையும் மாலபே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.