வேர்வை வரும் வரை வேலை செய்தாலே போதும், உடல் எடை குறைந்துவிடும் என்று கூறுவர். இதற்காகவே பெரும்பாலான மக்கள் ஜிம்மில் சென்று வியர்வை வரும் வரை உடற் பயிற்சி செய்வர்.
இதுவே குளிர்காலம் என்றால் எப்படி உடை எடையை குறைப்பது என்று பார்க்கலாம்.
தக்காளி ஜூஸ்
தக்காளி, குறைவான கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் விவசாயத்துறை ஆய்வின் படி, 100 கிராம் தக்காளி வெறும் 18 கலோரிகளையும், 3.86 கிராம் கார்போவும் கொண்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. உடல் எடையை குறைக்க தக்காளி ஜூஸ் பிரதான பங்கு வகிக்கிறது.
வாரத்திற்கு மூன்று முறை தக்காளி ஜூஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.
கேரட் ஜூஸ்
கேரட்களில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. நார் செரிமானம் அடைய மிக அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்ளும். ஸோ, ஒரு முழு கேரட் சாப்பிட்டாலே, நீண்ட நேரத்திற்கு உங்களுக்கு பசியே இருக்காது. அமெரிக்காவின் விவசாயத்துறை ஆய்வின் படி, 100 கிராம் கேரட்டில் 41 கலோரியும், 3 கிராம் நார்ப்பொருளும் உள்ளது.
வாரத்திற்கு மூன்று முறை கேரட் ஜூஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.
ஆப்பிள் ஜூஸ்
குறைவான கலோரி கொண்ட பழம் ஆப்பிள். 100 கிராம் ஆப்பிளில் 50 கலோரிகள் உள்ளது. ஆப்பிள் ஜூஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை கணிசமாக குறைக்கலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.