யாழ்ப்பாணம் வரணி குடம்பியன் பிரதேச குளத்தில் இன்று ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்குளுக்கு முன்னர் நீராட சென்ற மூவரில் 37 வயதுடைய மகாலிங்கம் மணிவண்ணன் என்பவரே நீரில் மூழ்கிய நிலையில் இன்று பிரதேச மக்களினால் சடலமாக மீட்கப்பட்டார்.
மேலதிக விசாரணையை யாழ் கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.