ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் வளர்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் நேர்மறையான கிரகமாக அறியப்படுகிறார். அதனால்த குருபகவானின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சூரியனின் ராசி மாற்றம் போலவே நட்சத்திர மாற்றமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
தற்போது குருபகவான் ஆயில்யம் நட்சத்திரத்தில் நிலைபெற்றுள்ளார், ஆனால் செப்டம்பர் 20 ஆம் திகதி குருபகவான் ஆயில்ய நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்குள் நுழைகிறார். அதன்பின் அக்டோபர் 08 ஆம் திகதி வரை அதே நிலை நீடிப்பார். இந்த நட்சத்திரம்கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படும் நட்சத்திரமாகும்.குருபகவானின் இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று நாம் இங்கு பார்ப்போம்
கடகம்
குருபகவான் ஆயில்ய நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நுழைவது கடக ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களைக் கொடுக்கப்போகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கடன் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரலாம், இனி அவர்கள் பணப்பிரச்சினைகளை எதிர்கொள்ள மாட்டார்கள். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்று கனவு காண்பவர்களுக்கு, இது அது நிறைவேறும் காலமாக இருக்கும். திருமணமான தம்பதிகள் இந்த காலகட்டத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குருபகவானின் இந்த நட்சத்திர மாற்றம் வெற்றிகள் குவியும் காலகட்டமாக இருக்கும். இதனால் அவர்களின் பொருளாதார நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். இது அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றிகள் கிடைக்கும் காலமாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் அவர்களின் துறையில் பெரிய சாதனைகளை செய்ய முடியும். அவர்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் விரும்பும் வேலை கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் நேர்மறையான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். இந்த காலத்தில் அவர்களின் தொழில், சமூக அந்தஸ்து, அதிகாரம், புகழ் மற்றும் வாழ்க்கைத்தரம் போன்றவை உயரும். குருபகவான் முன்னேற்றம், அதிர்ஷ்டம் மற்றும் வணிகம் போன்றவற்றின் அதிபதியாக இருப்பதால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

