கிளிநொச்சி நகர் பகுதியில் கடந்த 17ஆம் திகதி முதல் காணாமல் போன 15 வயதுடைய சிறுமி மாத்தளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் பெற்றோருடன் வசித்து வந்த 15 வயதுடைய சிறுமி கடந்த 17ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் முன்னெடுப்பதில் அசமந்த போக்கு காட்டி வருவதாக சிறுமியின் பெற்றோரால் தெரிவிக்கப்பட்ட நிலையில், குறித்த சிறுமி நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியை நபர் ஒருவர் இரு பெண் பிள்ளைகளின் உதவியுடன் மாத்தளை – செலகம பிரதேசத்திற்கு கடத்திச் சென்றதாகவும், அங்கிருந்து சிறுமி தப்பியோடி அவர்களது பெற்றோரின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டு பெற்றோரால் கிளிநொச்சிக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மேலும் சிறுமிக்கு நடந்தவை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன், சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெறிவிக்கப்பட்டுகின்றது